அரசியல்உள்நாடு

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குச் சீட்டுகள் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

712,318 அரச துறை ஊழியர்கள் 2024 இல் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் 76,977 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு காலம் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

editor

பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

G.C.E (O.L.) மாணவர்களுக்கு இனி IT பாடம் கட்டாயம்!