அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்று நள்ளரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி, தபாலில் ஏற்படக்கூடிய கால தாமதங்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திற்கொண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!