உள்நாடு

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும்  ஏப்ரல் மாதம் 8,9 மற்றும் 10 திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவள்ளன.

எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர், அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

செவ்வாயன்று கோட்டா – மைத்திரி இடையே சந்திப்பு