உள்நாடு

தனியார் வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) –  நாடுபூராகவும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு காணப்படுவதால், அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நாடுபூராகவுமுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு காணப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

எனவே நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துச் செல்லும் மருந்துகளுக்கான பற்றாக்குறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே மருந்துகளையம் வைத்திய உபகரணங்களையும் இலங்கைக்க நன்கொடையாக வழங்குமாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கையரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மத்ரஸா மாணவனின் மரணம் – வெளிவந்த வாக்குமூலம்!

கொரோனாவிலிருந்து இதுவரை 2,842 பேர் குணமடைந்தனர்

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்