உள்நாடு

 தனியார் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி துஷ்பிரயோகம்!

(UTV | கொழும்பு) –  தனியார் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி துஷ்பிரயோகம்!

ஹொரவபத்தானையில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவபத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் நடத்தும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட வேளையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும், 10 வயதுடைய பெண் குழந்தையொன்றின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
தனியார் வகுப்பின் போது பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், அன்றைய தினம் வகுப்பிலிருந்து வீடு திரும்பியதும் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து ஹொரவ்பத்தனை பொலிஸார் சந்தேகநபரை நேற்று கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

விமான நிலையத்தில் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

editor

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை