உள்நாடு

தனிமைப்படுத்தல் விதி : 50,000 ஐ கடந்த கைதுகள்

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 50,027 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் சுமார் 43,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஞ்சிய சுமார் 7,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில், குற்றவாளியாகும் நபர் ஒருவருக்கு, 10,000 ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றினால் விதிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

B.1.1.1 நாட்டில் பரவலாக சிக்கும் தொற்றாளர்கள்

கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி இன்று