உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 93 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்த மேலும் 93 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 35 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 4,120 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பூசா கடற்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை வெற்றிகரமாக முடித்த ஏழு பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு நேற்று(29) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

இனி அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது – புத்தளத்தில் அநுர

editor