உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டவிதி : இதுவரையில் 1,957 பேர் கைது

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 1,957 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இவ்வாறு சட்டவிதிகளை மீறியதாக 1,957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக தொடர்ந்தும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் அந்த பகுதிகளை விட்டு வெளியேறுவதோ அல்லது வெளி நபர்கள் அந்த பிரதேசங்களுக்கு செல்வதோ சட்டவிரோதமானகும். இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு சமூகமளிக்குமாறு சுகாதார பிரிவினர் அழைப்பு விடுத்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இது போன்ற செயற்பாடுகளின் ஊடாகவே வைரஸ் பரவலை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்

நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது