உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு இருவர் மற்றும் ரூமிக்கு பிணை [VIDEO]

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு