உள்நாடு

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 40 பேர்

(UTV|சிலாபம்)- சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு குறித்த குடும்பங்கள் சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது

திடீர் சுகாயீனம் காரணமாக 05 பேர் பலி – யாழில் பரவும் மர்ம காய்ச்சல்

editor