உள்நாடு

தனிமைபடுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இரணைமடு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 126 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து இன்று(23) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில், 1 இலட்சத்து 45 ஆயிரத்து 373 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

அம்பாறையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

editor

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

editor

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அழைப்பு