வகைப்படுத்தப்படாத

தனி அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார்

(UTV|COLOMBO)-கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, கட்சியினுள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் தேர்தல் பெறுபேற்றின் பின்னடைவு என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுக்கிடையே நேற்று பிற்பகல் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொடர்ந்தும் அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல சிக்கல் நிலவுமாயின் ஐக்கிய தேசிய கட்சியினால் தனி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும் என குறிப்பிட்டார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளை நடத்த தீர்மானம்!

Mathews magic sees Lanka home in nail-biter against West Indies