உள்நாடு

தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்தார் – ஆளுநர்

(UTV | கொழும்பு) –     இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தான் 25 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளத்தை பெறுவதாகவும், இதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்திலும் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதாகவும் சமீபத்தில் வெளியான தகவல்களை முற்றாக மறுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் இவ்வாறு கூறுவதை பார்ப்பது வருத்தமளிக்கின்றது. தாம் பொறுப்புடன் கூறுவது என்வெனில் முதலாவதாக இந்த விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நாட்டில் பொறுப்பு மிக்க அரசியல்வாதிகள் இவ்வாறு தெரிவிப்பதை அது உண்மை என அனைவரும் நம்புவார்கள். முதலாவது விடயம் எனக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எந்த ஓய்வூதிய கொடுப்பனவும் கிடைப்பதில்லை. இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்தில் நான் மற்றும் மத்திய வங்கியில் எவரேனும் எந்த வகையிலாவது முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துகொண்டமை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவே ஆகும். அனைவருக்கும் கிடைத்த சம்பளம் எனக்கும் கிடைத்துள்ளது. இருப்பினும் தெளிவாக கூறி கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஓய்வூதிய சம்பளம் கிடைப்பதில்லை. எனக்கு 25 இலட்சம் ரூபா கிடைப்பது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது .நான் மத்திய வங்கி ஆளுநர் என்ற ரீதியில் நான் மத்திய வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி என்ற ரீதியில் 29 வருடகாலம் பணியாற்றியதற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கின்றது என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மத்திய வங்கி ஆளுநர் என்ற ரீதியில் கடமைக்கு வந்த அவர் இதுவரை காலம் இருந்த அனைத்து ஆளுநர்களுக்கும் கிடைக்கும் சம்பளம், வாகனம் ,வீடு என்பன கிடைத்தவாரே தனக்கும் கிடைத்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts

கொரோனாவிலிருந்து இதுவரை 2,842 பேர் குணமடைந்தனர்

விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தரவின் சாதனை

மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்