அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு ஆறு மாவட்டங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியினால் ஒதுக்கப்பட்ட சுமார் 200மில்லியனுக்கும் பெறுமதியான வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கு காரணம், றிசாத் பதியுத்தீன் அவர்களும், அவரது கட்சியும் சஜித் பிரமேதாஸா அவர்களை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க எடுத்த முடிவேயாகும்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்கவில்லை என்பதற்காக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலன்சார் அபிவிருத்திகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாக முடக்குவதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தவர்களுக்கு அல்லது அவருடன் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு தொடர்ந்தும் அபிவிருத்தி வேலைகள் இத்தேர்தல் காலத்தில் நடப்பதென்பதும் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட பாரிய சவால் மாத்திரமல் ல ஒரு வகையான மனித உரிமை மீறல் என்பதுடன் அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறலுமாகும்.

Related posts

பிரதேச சபை உறுப்பினர் ஹெரோயினுடன் கைது

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்: ஜனாதிபதி ரணில்

கரையோர ரயில் சேவையில் தாமதம்