அரசியல்உள்நாடு

தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பிரதமர் ஹரிணி

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன.

பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களாக முன்னேறக்கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை உடைக்க எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலமும், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் மாற்றுத்திறனாளி சேவைகள் போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் மூலமும் பெண்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது

மதுபானங்களில் விலை அதிகரிப்பு!

மர்மமான முறையில் உயிரிழந்த 16வயது சிறுமி.