உள்நாடு

தடுப்பூசி : அவசர சிகிச்சைப் பிரிவுகளும் தயார் நிலையில்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களுக்கு அருகில், அவசர சிகிச்சைப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றியப் பின்னர், ஏதாவது, ஒவ்வாமை ஏற்பட்டால், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வைத்திய குழுவொன்று, அங்கு தயார் நிலையில் இருக்கும் என தெரிவித்துள்ள சுகதார பிரிவு, தடுப்பூசியை ஏற்றும் முன்னர், ஏற்றிக்கொள்பவரின் விருப்பத்தைக் கடிதம் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு சுகாதார அலுவலக சபையின் உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள, அதிருப்தியை வெளியிட்டு உள்ளவர்களுக்குப் பலவந்தமாக ஊசி ஏற்றப்படாதென, சுகாதார அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தடுப்பூசியானது இலங்கையின் பிரதான ஆறு வைத்தியசாலையின் பணியாளர்களுக்கு இன்று (29) வழங்கப்படவுள்ள நிலையில், முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் பணியாளர்களுக்கே இத்தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சட்டமா அதிபரின் கோரிக்கை

ஆரம்பநிலை நீதிமன்றத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி

உடல் அடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது : இம்ரான் கான் [VIDEO]