சூடான செய்திகள் 1

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது

(UTVNEWS|COLOMBO ) – சட்டவிரோதமாக தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த 6 இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தர்ப்பங்களில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேன தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ 60 கிராம் தங்கத்துடன் 4 இந்தியர்கள் முதலில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பின்னர், ஒரு கிலோ 370 கிராம் தங்கத்துடன் இரண்டு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் சுமார் 17 மில்லியன் ரூபா பெறுமதியானது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களிடம் விசாரணைகளை; முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கண்டி – கலஹா சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ராஜித