வகைப்படுத்தப்படாத

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் – செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார்.

இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில்சார் ஆழமான பகுப்பாய்வு மற்றும் வர்த்தக சுங்கவரி; தொடர்பிலான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு செயலமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

[accordion][acc title=”அமைச்சர் உரையாற்றியதாவது”][/acc][/accordion]

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உடன்படிக்கையில் இலங்கை ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டது. அதற்கான முன்னோடியான நிகழ்வாக இந்தச் செயலமர்வை நாம் கருத முடியும் அதற்கான வலுவான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளோம்.

நாட்டின் ஏற்றுமதிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் இந்த உடன்படிக்கையின் மூலம் ஜீ.எஸ்.பி பிளஸ் இற்கு நிகரான வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

உலக வரத்தக மையமானது உலக நாடுகளுடன் 20 ஆண்டுகளுக்கு முன்னே 1997ம் ஆண்டு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் 29 நாடுகள் கைச்சாத்திட்டன. தற்போது 82 நாடுகள் அந்த ஒப்பந்த்துடன் இணைந்துள்ளன.

பிந்திய அறிக்கையின் படி பூகோள தகவல் தொழில்நுட்ப மென்பொருள் உற்பத்தி ஏற்றுமதியானது, பூகோள ரீதியான தன்னியக்க, மற்றும் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜெனிவாவைத் தளமாகக்கொண்டு இயங்கி வரும் உலக வர்த்தக மையத்தின் சிரேஷ்;ட புள்ளிவிபரவியலாளரும் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புத் துறைசார் நிபுணருமான எரிக்ஷிங், உலக வர்த்தக மையத்தின் சந்தை வர்த்தக புலமைசார் பிரிவு ஆலோசகரமான ஷியாயோபிவ் ரேங் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இந்தச் செயலமர்வில் இலங்கை வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொனாலி விஜயரட்ன மற்றும் கணணி சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொலைத்தொடர்பு ஆணைக்குழு மொபிட்டல் கொள்கைக்கல்வி நிலையம்  ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சர்வதேச வர்த்தக சம்மேளனம், இக்டா மற்றும் இன்னோரன்ன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தச் செயலமர்வில் பங்குகொண்டன.

[accordion][acc title=”அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது”][/acc][/accordion]

தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் மீதான வரிகள் மற்றும் இறக்குமதிச் சுங்க வரிகள் ஆகியவற்றை பூச்சியத்துக்கு கொண்டு வருவதை மையமாகக்கொண்டே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் சரித்திரமிக்க நிகழ்வாக இதனை நாம் கருத முடியும். இந்த ஒப்பந்தத்தின் வழியாக 2015ம் ஆண்டு டிசம்பரில் கொண்டுவரப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஒப்பந்த விரிவாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்ப 2ம் கட்டத்தின் கீழான மேலும் 201 தகவல் தொழில்நுட்ப மென்பொருட்கள் மீதான இறக்குமதிச் சுங்கவரி பூச்சியமாக்கப்பட்டது.

1997ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் மூலம் 1.7 ரில்லியன் டொலர் வருமானம் உலக நாடுகளுக்கு கிடைத்துள்ளது.

201 மென்பொருட்களின் இறக்குமதிச் சுங்கவரி அகற்றப்பட்டதன் விளைவாக வருமானம்  3 ரில்லியன் டொலராக அதிகரித்திருக்கிறது.

அரைக்கடத்திகள், ஸ்மார்ட் போன், மருத்துவ உயர் தொழில்நுட்ப உபகரணங்கள், ஜீ பி எஸ் வழி காட்டும் உபகரணங்கள் தொட்டுணரும் திரைகளை உள்ளடக்கிய பொருட்கள் ஆகியன வரி நீக்கப்பட்டவற்றில் அடங்குகின்றன.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் இலங்கை அடங்களாக உலகையே மாற்றமடையச் செய்து வருகின்றது. இலங்கையில் இந்தத் தொடர்பாடல்துறை எற்றுமதி வருமானத்தில் 4வது இடத்தை வகிக்கின்றது. அது மட்டுமன்றி ஏற்றுமதி வருமானத்தில் 500 சதவீம் வளர்ச்சி கண்டுள்ளது.

இலங்கையில் 2006ம் ஆண்டு 166 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வருமானம் 2016 இல் 900 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டமையை நான் இங்கு சுட்டிக்காட்;டியே ஆகவேண்டும்;. அது மட்டுமன்றி இந்தத் துறையில் 85,000 இற்கு மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர.; நல்லாட்சி அரசின் தலைவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். 2015 – 2020 ஆண்டு வரையிலான திட்ட வரைபின் மூலம,; தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் மீள்கட்டமைப்பு ஆகிய இரண்டு விடயங்களும்  முக்கியமானதாக அடையாளம் கானப்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை இவையே நிர்ணயம் செய்யப்போகின்றது என்ற உண்மையை நான் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

Ranjan apologizes to Maha Sangha for his controversial statement

4 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் பாகிஸ்தான் தம்பதியினர் கைது

President pledges not to privatise State Banks