வகைப்படுத்தப்படாத

த.தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

(UDHAYAM, COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்துடனும் மக்களுடனும் இணைந்து செயற்படுகிறது.

ஆனால் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து தம்மை பலப்படுத்தி வருகிறதே தவிர, மக்கள் நலன் குறித்து அக்கறைக் கொள்ளவில்லை.

சர்வதேசமும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக செயற்படுகிறது என்று ரீதியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த செயற்பாடுகளை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Sri Lankan arrested for using Filipina wife as cybersex slave

பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்

ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்