உள்நாடு

ட்ரோன் கெமராக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ட்ரோன் கெமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை இன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் – விஜயதாச

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம்

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!