உலகம்

ட்ரம்ப் கணக்கினை ஆட்டங்காட்டிய ட்விட்டர்

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டுள்ளார்.

இந்த போராட்டம் பற்றி ட்ரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் அதனை கட்டுப்படுத்துவதற்காக டிரம்பின் 3 பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, குடிமக்கள் ஒற்றுமை அல்லது வன்முறை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்புடைய டுவிட்டரின் கொள்கை விதிகளை மீறும் வகையிலான செயல்கள் வருங்காலத்தில் நடைபெற்றால், ட்ரம்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி

புக்கர் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – அன்டோனியோ குட்டரெஸ் இடையில் சந்திப்பு.