சூடான செய்திகள் 1விளையாட்டு

டோனியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் -முனாப் பட்டேல்

(UTVNEWS | COLOMBO) – டோனியின் ஓய்வு குறித்து அவரை யாரும் எதுவும் தொந்தரவு செய்ய வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

டோனி தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருப்பார். அது குறித்து ஏற்கனவே அவர் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் தெரிவித்து இருப்பார்.

அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். யாரும் ஆலோசனை வழங்க தேவை இல்லை. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் நிச்சயமாக தனது முடிவை தெரிவித்திருப்பார்.

எனவே டோனியின் ஓய்வு குறித்து அவரை யாரும் எதுவும் தொந்தரவு செய்ய வேண்டாம். 1975ஆம் ஆண்டு முதல் மேற்கிந்திய தீவுகள் அணி செய்த சாதனைகளை டோனி 2007ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுகளிலேயே செய்து முடித்து விட்டார்.

அவர் அனைத்து சம்பியன் கிண்ணகளையும் இந்தியாவிற்கு பெற்று தந்து விட்டார். இனியும் சாதிப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்வேன். அவர் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணியில் இருந்து எளிதில் தவிர்க்க முடியாது” என கூறினார்.

Related posts

பகிரங்க விவாதத்திற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு