உள்நாடு

 டொலர் பிரச்சினைக்கு தீர்வு வந்துட்டது – நந்தலால் வீரசிங்க

(UTV | கொழும்பு) –  டொலர் பிரச்சினைக்கு தீர்வு வந்துட்டது – நந்தலால் வீரசிங்க

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் வரவிருக்கும் ஒப்புதல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் அதேவேளை நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

மேலும், IMF வாரியம் நாளை (20) இலங்கைக்கான கடனை முறைப்படி அங்கீகரிக்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணை யாக வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தாண்டு நிறைவடையும் வரையில் விசேட சோதனை

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்

ராஜிதவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்