விளையாட்டு

டொம் மூடியின் சேவைகள் இனி தேவையில்லை – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

(UTV | கொழும்பு) –  மார்ச் 2021 முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக பணியாற்றிய அவுஸ்திரேலிய தேசிய பயிற்றுவிப்பாளரான டொம் மூடி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ள, இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்கும் டொம் மூடிக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

டொம் மூடி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிடம் நேரடியாகப் முறையிட்டு வருவதால்,டொம் மூடியின் சேவைகள் இனி தேவைப்படாது என்று நிர்வாகக் குழு கருத்து தெரிவித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், டொம் மூடி 2021 இல் இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தனது பதவிக்காலத்தில் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இலங்கை கிரிக்கெட் நன்றி தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை அணியினை சாடும் : முத்தையா

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கம்