விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா விலகல்

(UTV |  அவுஸ்திரேலியா) – சிட்னி டெஸ்ட்டில் காயமான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. குறித்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தி கலக்கினார்.

இதன்போது, துடுப்பாட்டத்தின் போது அவர் கைவிரலில் பந்து பட்டதில் காயமடைந்தார். இதனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. மேலும் நான்காவது போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஜடேஜாவின் காயம் குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஜடேஜாவின் காயம் ஆற 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என்பதால் அவர் பெப்ரவரி மாதம் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவித்துள்ளது. இன்றைய போட்டியில் அவர் இறங்குவதற்கான தேவை ஏற்பட்டால் வலி நிவாரணி ஊசி போட்டுக்கொண்டு இறங்குவார் என கூறப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காலியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது ஜப்னா

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ்…

இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி