உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 80,222 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகமானோர் இனங்கானப்பட்டுள்ளனர்

இந்த ஆண்டில் இதுவரை 80,222 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது, இவர்களில் 16,948 பேர் கொழும்பு மாவட்டத்திலும் 15,419 பேர் கம்பஹா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர். நாடு முழுவதும் 61 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் டெங்குவால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு – மட்டக்களப்பு மக்கள் கவலை

editor

விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடியாணை

ரயில் சேவைகள் மந்தகதியில்