சூடான செய்திகள் 1

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல மாகாணங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, இரத்தினப்புரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்சசல் அதிகம் பரவுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மழையுடனான வானிலைக் காரணமாக நுளம்பு பெருகுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் வைத்திய உதவியை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எஸ்.பீ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்காக 2 கதிர்வீச்சி சிகிச்சை இயந்திரங்கள்

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை