கேளிக்கை

ட்விட்டரில் டிரெண்டாகும் ‘BigilRing’

(UTVNEWS|COLOMBO) – அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதனை அடுத்து ‘பிகில்’ படக்குழுவினர் அனைவரையும் விஜய் கௌரவித்தார். படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400 பேருக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார்.

இந்நிலையில், டுவிட்டரில் ‘BigilRing’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. படக்குழுவினருக்கு விஜய் அளித்த மோதிரம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

லொஸ்லியா தந்தை மரணம் : இலங்கைக்கு உடலை கொண்டு வர நடவடிக்கை

‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் மோஷசன் போஸ்டர் வெளியானது

சூர்யா முன் சாய் பல்லவி கதறி அழுதது இதற்கு தானா?