உள்நாடு

டீசல் தட்டுப்பாடு : முடங்கும் பேரூந்து சேவை

(UTV | கொழும்பு) – டீசல் தட்டுப்பாடு காரணமாக 11,000 தனியார் பஸ்கள் இயங்கவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவலுக்கு பிறகு, 18,000 முதல் 13,000 தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன, அவற்றில் 3,000 மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவைகளும் 75 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார். கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் நாளாந்தம் சுமார் 900 – 1000 பஸ்கள் சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் தற்போது அந்த எண்ணிக்கை 300 முதல் 400 வரை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பஸ்களின் எண்ணிக்கையும் 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ்களுக்கு எரிபொருள் நிரப்பும் முறைமை கொழும்பு பஸ்தியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்தில் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் கொழும்பிலிருந்து பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து வந்து செல்லும் மற்றும் புறப்படும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதுடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் சபாநாயகரின் இறுதிக்கிரியைகள் இன்று

காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – . ரணில்விக்ரமசிங்க

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு [PHOTOS]