விளையாட்டு

டிக்கெட் விற்பனை: SLC தனது முக்கிய தீர்மானங்களை அறிவித்தது

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிக்கட் விற்பனைக்கான முழு பணத்தையும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம் என இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்க்கிறது.

“ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்தவுடன் பாகிஸ்தான் விரைவில் நாட்டிற்கு வரும், பின்னர் எங்களுக்கு ஆசிய கோப்பை கொழும்பில் உள்ளது, எனவே இந்த போட்டியை ஆதரிக்க அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று மொஹான் டி சில்வா மேலும் கூறினார்.

Related posts

உலக கட்டழகராக இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ்

நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!