உலகம்

டிக் டாக் மிரட்டலில் அடங்கியது அமெரிக்கா

(UTV |  அமெரிக்கா) – கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளிலும் டிக் டாக் செயலி தடை நேற்று(20) முதல் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த செயலிக்கு தடை விதிக்கும் முடிவை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் டிக் டாக் செயலி தடை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை ஒரு வாரத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீடித்துள்ளார்.

இந்த ஒரு வாரத்திற்கு என்ன காரணம் என்று விளக்கம் அளிக்கவில்லை என்றாலும் இந்த ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நிறுவனம் ஒன்று டிக் டாக் செயலியை வாங்கும் என அந்நாட்டு செய்திகள் ஊகிக்கின்றன.

Related posts

ஈரான்- பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்கா

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் – பிணவறைகளாக மாறி வரும் ஐஸ்கிரீம் வண்டிகள்.

பொது மக்களிடம் மன்னிப்பு கோரும் ரஷ்ய ஜனாதிபதி!