அரசியல்உள்நாடு

டயனா வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 வழக்குகளுடன் தொடர்புடைய சாட்சியாளர்களை எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி தகவல்களை வழங்கிய கடவுச்சீட்டு பெற்றமை மற்றும் செல்லுபடி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கின் சாட்சியாளர்களான குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் அல்லது அவரின் பிரதிநிதி மற்றும் மேலும் சில தரப்பினருக்கு அழைப்பாணை விடுக்கப்படவுள்ளது.

Related posts

நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

editor

கல்வியியற் கல்லூரிகளுக்கு தற்காலிக பூட்டு