உள்நாடு

டன்சினம் – நுவரெலியா பிரதான வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு.

2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் இருந்து பூன்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையானது கார்ப்பட் இடப்பட்டு நேற்று (20) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிதள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பல வருட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்டு வந்த 9 கி.மீ வரையிலான குறித்த பாதையானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் அமைச்சின் 1.3 பில்லியன் ரூபாய் நேரடி நிதி ஒதுக்கீட்டீன் மூலம், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கார்ப்பட் இடப்பட்டுள்ளது.

இந்தி வீதியினை பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை தேவைளுக்கு, மற்றும் பல்வேறு வகையிலான தேவை பாடுகளுக்காக மக்கள் பயண்படுத்தி வந்தனர்.

இன் நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிதள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் திரு மகேந்திர விஜயபால, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட பிரதான பொறியியலாளர் திரு சம்பத் சமரநாயக்க, நுவரெலியா பிரிவுக்கான நிறைவேற்று பொறியியலாளர் திரு மனோஜ் ஹேரத், நோர்வூட் பிரிவுக்கான பொறியியலாளர் திரு தரிந்து ஶ்ரீ வர்த்தன தோட்ட பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Related posts

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை கிடைக்கப்பெறாத உள்ளூராட்சி தேர்தல் வர்த்தமானி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு