வகைப்படுத்தப்படாத

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் – சிறுவன் உள்பட 3 பேர் பலி

(UTV|GERMANY)-மத்திய ஜெர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிரங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து அருகே மக்கள் குழுமியிருந்த இடத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில், விமானத்தில் பயணம் செய்த 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka all set for Expo 2020 Dubai

Suspect arrested with cigarettes worth Rs.1.3M

வாக்களிப்பதற்கு செல்லுபடியான அடையாள அட்டைகள்-மஹிந்த தேசப்பிரிய