வகைப்படுத்தப்படாத

ஜெயலலிதா வீட்டில் கொலை!..ஒருவர் படுகாயம்…பெரும் பரபரப்பு

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது.

ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார்.

ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி இருக்கிறார்.

நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல், இவரைக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில், கொடநாடு எஸ்டேட் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த எஸ்டேட் தற்போது, டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், அவரைக் கொன்றுவிட்டுக் கொள்ளையடிக்க முயன்றனரா அல்லது முக்கிய ஆவணங்களைக் கடத்த முயன்றனரா என பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Related posts

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணி நீக்கம்

JMD Indika maintains one stroke lead after Round 2

எரிபொருள் கையிருப்பு உள்ளதால் அச்சம் வேண்டாம்