விளையாட்டு

ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி – 2017

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட கடற்படை கிண்ண 2017 இற்கான ‘ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயகுணரத்ன தலைமையில்வெற்றிகரமாக நடைபெற்றது.

நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து நுவரலியா கிரகோரி வாவியில் நேற்று முன்தினம் இந்த போட்டி இடம்பெற்றது.

குறித்த போட்டி மலைநாட்டின் பிரசித்தமான ‘வசந்த உதணய’ எனும் பருவ காலத்தினை முன்னிட்டு கடற்படையினரால் நான்காவது தடவையாக நடத்தப்பட்டது.

சாய்வு மற்றும் இழுவை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற இப்போட்டிகளில் கடற்படை வீரர்களுட்பட நாடுபூராகவுமுள்ள விளையாட்டு கழகங்களும் கலந்துகொண்டன.

இழுவை போட்டிகளில் பல்வேறு குதிரை வலுக்களை கொண்ட இயந்திரப்படகுகள் பங்கு பற்றிய அதேவேளை சாய்வு படகுகளும் பங்குபற்றின.

ஏப்ரல் மாத வசந்தகாலத்தினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமது வருடாந்த விடுமுறையினை சந்தோசமாக கழித்து மகிழ்வதற்காக நுவரெலியாவிற்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவான் துஷாரவுக்கு கொவிட் உறுதி

பொக்சிங்யில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் சாதனை!

க்ரோன்ப்ரி மெய்வல்லுனர் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள்