உள்நாடு

ஜூலை 31ம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் – லிட்ரோ

(UTV | கொழும்பு) –   அடுத்த 4 மாதங்களுக்கு நாட்டிற்கு தொடர்ந்து எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் நேற்று (30) கைச்சாத்திட்டுள்ளது.

இதன்படி, ஜூலை 31ஆம் திகதியுடன் எரிவாயு தட்டுப்பாடு முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மொத்த எரிவாயு பங்கின் மதிப்பு 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இதற்காக உலக வங்கி 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளதுடன் மீதி 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை லிட்ரோ நிறுவனம் செலுத்தியுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்,

“ஜூலை 06 ஆம் திகதி, 3,700 தொன் கொண்ட முதல் எரிவாயு சரக்கு கப்பல் வரும். மேலும் 3,700 தொன் எரிவாயு சரக்கு கப்பல் ஜூலை 10 ஆம் திகதி வரும். அவர்கள் தேவையான முன்பணத்தை செலுத்தியுள்ளனர். ஜூலை 16, 20, 22, 24, 27 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மேலும் பல கப்பல்கள் வர உள்ளன. ஜூலை 31ம் திகதிக்குள் எரிவாயு பற்றாக்குறையை லிட்ரோவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறோம்..”

Related posts

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – இம்ரான் எம்.பி

editor

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

அபிவிருத்திகளை தடைசெய்யும் வக்கிர மனநிலையில் மஸ்தான் செயற்பட்டார் – ரிஷாட் பதியுதீன்

editor