சூடான செய்திகள் 1

ஜுன் 23ம் திகதி முதல் தொடக்கம் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுப்பு

(UTV|COLOMBO) போதைப்பொருள் பாவனை, போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச நிகழ்வு இடம்பெறுகிறது.

இந்த தினத்தை தொனிப்பொருளாக கொண்டு ஜனாதிபதி பணியாளர் செயலணியினால் ஜுன் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான ஒரு வாரக்காலம் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தெளிவுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டடிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை இரத்து

பாடசாலைப் புத்தகங்கள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை

கம்பஹாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்