தம்புள்ளை – பக்கமூன வீதியில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
ஜீப் வாகனம் ஒன்று மரத்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.