வணிகம்

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை மூலம் இலங்கைக்கு 5 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை கிடைக்க உள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 5 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஐரோப்பாவுக்கு இலங்கையில் இருந்து சுமார் 260 கோடி யுரோக்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நாட்டின் மொத்த chinanbஉற்பத்திகளில் மூன்றில் ஒரு பகுதி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையின் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் குறைந்த பட்சம் 30 கோடி யுரோவுக்கும் மேலாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தினால் இலங்கைக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்குமென்றும்  ஐரோப்பிய ஒன்றியம்  மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் நுங் லாங் மார்க்கு இதனை தெரிவித்தார்.ஊடகவியலாளர்  சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவின் போல் கொட்ப்ரேவும் இங்கு கருத்து தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் இலங்கைக்கு 2021ம் ஆண்டு வரை இந்த வரிச் சலுகை கிடைக்கலாமென்றும் அவர்தெ ரிவித்தார்.

நாடு கூடுதலான நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடாக 3 வருடங்கள் தொடர்ந்து நீடித்தால் அந்த வரிச் சலுகை நீக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

ஒவ்வொரு மாதமும் 5ம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சரவை அனுமதி