உள்நாடு

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் நாளை தலைமை உரை

(UTV | கொழும்பு) – இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், நேற்றுப் பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜி-20 சர்வமத மாநாடு 2021 நாளை(12) போலோக்னா நகரில் ஆரம்பமாகவுள்ளது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரையாற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய பிரதமர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கை.

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

வழமைக்குத் திரும்பும் பேருந்து சேவைகள்