சூடான செய்திகள் 1

ஜாகிர் நாயக்கின் பேச்சால் மலேசியாவில் பதற்றம்

(UTVNEWS|COLOMBO) -மலேசியாவில் ஜாகிர் நாயகிக் பேச்சால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் கிளந்தான் என்ற மாநிலத்தில் உரையாற்றியபோது அவர் “மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூதாயத்தினரைவிட நூறு மடங்கு நன்றாக உள்ளனர். அதே வேளையில் மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் நம் நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோதியை ஆதரிக்கின்றனர்,” என்று ஜாகிர் நாயக் தமது உரை தெரிவித்த கருத்தால் இன் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு மேல் இவர் நாட்டில் தங்கியிருந்தால் நாட்டில் மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே எதிர்பாளர்களின் கருத்தாக உள்ளது.

எந்த ஆய்வின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் எனும் கேள்வி எழுந்துள்ளது. அவரது பேச்சு மத, இன நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்காதா? என்றும் எதிர்பார்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஜாகிர் நாயக் விவகாரம் காரணமாக இந்தியா-மலேசியா இடையேயான நல்லுறவு பாதிக்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தக் கேள்விகளுக்கு மலேசிய பிரதமர் டாக்டர் துன் மகாதீரே பதிலளித்துள்ளார். இந்தியாவில் ஜாகிர் நாயக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜாகிர் நாயக்கை (இந்தியாவுக்கு) திருப்பி அனுப்ப முடியாது, ஏனெனில் அவர் அங்கு கொல்லப்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவர் இங்கேதான் (மலேசியாவில்) இருப்பார்” என்று பிரதமர் மகாதீர் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

இராஜாங்க அமைச்சர் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதியன்று பிரதமருக்கு

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு