உள்நாடு

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

(UTV|COLOMBO) – ஜா-எல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஜா-எல பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை கடற்படை சோதனையிட்டதுடன், சந்தேக நபர்களை விசாரித்த போது, முரண்பாடான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 28 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் வேனுடன் ஜா-எல பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு [VIDEO]

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor