உள்நாடு

ஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம்; சந்தேநபர் கைது

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு – ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பேலியகொடையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து கைத்துப்பாக்கி, இரண்டு ரவைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

குருணாகல் – ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி ஜம்பட்டா வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் 24 வயதுடைய சூரியகாந்த் என்ற 131 தோட்டம், ஜம்பட்டா வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

editor

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்

ரயில்வே நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்