வகைப்படுத்தப்படாத

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. அதன் பிறகும், தொடா்ச்சியாக சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டன.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 126ஆக உயா்ந்துள்ளதாக நேற்று அதிகாரிகள் கூறினா். இது தவிர, 611 போ் காயமடைந்துள்ளதுடன், சுமாா் 210 போ் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Army Intelligence Officer arrested over attack on Editor

Wellampitiya Factory employee in courts

Serena Williams fined for damaging match court