வகைப்படுத்தப்படாத

ஜப்பானின் புதிய மன்னராக நருஹிட்டோ

(UTV|JAPAN) ஜப்பானின் 126ஆவது மன்னராக, அகிஹிட்டோவின் மகன் நருஹிட்டோ இன்று புதிய மன்னராக பதவியேற்றார்.

ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ நேற்று பதவி விலகியதை அடுத்து அவரது மகன் நருஹிட்டோ இன்று புதிய மன்னராக பதவி ஏற்றார்.

பொதுவாக ஜப்பான் நாட்டின் மன்னர்களுக்கு எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. எனினும் அவர்கள் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றனர்.

இந்நாட்டை பொறுத்தவரை மன்னராக இருக்கும் நபர், தனது மரணம் வரை மன்னராகவே இருப்பார். அவரை தொடர்ந்து, அவரது வாரிசு அரியணை ஏறுவார்.

ஆனால், ஜப்பானின் 125–வது மன்னரான அகிஹிட்டோ , வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணமாக மன்னர் பதவியை துறப்பதாக கடந்த 2016–ம் ஆண்டு அறிவித்தார்.

அதனை தொடர்ந்து 2019–ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி, மன்னர் அகிஹிட்டோ முறைப்படி பதவி விலகுவார் என்றும், அவரது மகன் நருஹிட்டோ புதிய மன்னராக பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அகிஹிட்டோவின் புதல்வரான நருஹிட்டோ இன்று புதிய மன்னராக பதவியேற்றார்.

59 வயதான மன்னர் நருஹிட்டோ இன்று பதவியேற்பின் பின்னர் ஆற்றிய உரையில், மக்களின் மகிழ்ச்சி, நாட்டின் முன்னேற்றம் மற்றும் உலக சமாதானம் ஆகியவற்றை தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.

 

 

Related posts

இம்மாதத்திற்குரிய யொவுன்புர நிகழ்ச்சி திருகோணமலையில் இடம்பெறும் –பிரதமர்

UNP Presidential candidate will be revealed in 2-weeks

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார பதவில் இருந்து விலகல்