அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் (Trinh Thi Tam) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (21) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் முதலீட்டு ஊக்குவிப்பிலும் இலங்கையுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

அத்தோடு நாடென்ற வகையில் வியட்நாம் அடைந்துள்ள வெற்றிகளை இலங்கையில் திறம்பட பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வியட்நாம் தூதரகத்தின் பிரதி செயற்பாட்டு பிரதானி லீ வேன் ஹோங் (Le Van Huong) மற்றும் தூதுவரின் செயலாளர் ரம்யா நிலங்கனி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கம்பளை பாடசாலை மரம் முறிந்து விழுந்த சம்பவம் | இரண்டாவது குழந்தையும் உயிரிழப்பு !

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

மே 9ஆம் திகதி உயிரிழந்த எம்.பி.க்கு இழப்பீடு