உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலில், பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் – நாமல் உறுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமது கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார்” எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி அதன் பலனை மக்களுக்கு வழங்கக்கூடிய வேட்பாளர் ஒருவரே நிறுத்தப்படுவார்.

நாட்டுக்கு ஏற்ற கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தனது படையை கட்டியெழுப்புவதாகவும், வெற்றிபெறும் வேட்பாளரை முன்வைப்போம் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், வேட்பாளர் பெயர் இன்னும் தெரிவுப் பட்டியலில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ் தேவானந்தா

editor

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் – டலஸ் அழகப்பெரும

editor