உள்நாடு

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!

(UTV | கொழும்பு) –

ஸ்ரீ சித்தார்த்தா தேசிய பாடசாலையின் 150ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியை கொலை செய்ய சினைப்பர் தாக்குதல் நடத்துவதற்கு வீரர் தேவை என முகநூலில் பதிவு வெளியிட்ட 19 வயதான இளைஞரை புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

எப்பாவல மடியாவ பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இச்சந்தேக நபர், கணினி மற்றும் கைத்தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகி விளையாடி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று

வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்