சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு ஆதராவாக 5 மனுக்கள் நீதிமன்றில் தாக்கல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தினை கலைக்க எடுத்த தீர்மானமானது அரசியல் அமைப்பிற்கு அமையவே எனவும் இதில் சட்ட மீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்து, பாராளுமன்ற கலைப்பிற்கு ஆதரவாக ஐந்து மனுக்கள் உயர் நீதிமன்றில் இன்று(13) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பிரேமநாத் சீ.தொலவத்த, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் சன்ன ஜயசுமான ஆகியோராலேயே குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த 09ம் திகதி நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று